Tuesday, 21 April 2020

தாம்பரம் கோட்டத்தில் திருவொற்றியூர் அஞ்சலகத்தில் தபால்காரராக பணிபுரியும் நான்
என்னுடைய பீட்டில் சரஸ்வதி நகர் என்னும் ஏரியாவில் சத்தியம் தொலைக்காட்சியில் பணிபுரியும் ஒரு பெண்ணுக்கு இன்று கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் வோதனையான ஒரு செய்தி என்னவென்றால் நேற்று தான் அவர்கள் வீட்டில் ஒரு கடிதம் கொடுத்துவிட்டு வந்தேன். மிகுந்த மன உலைச்சலாக இருக்கிறது. என்னுடன் பணிபுரியும்  ஊழியர்களுக்கும் என் குடும்பத்தாருக்கும், ஏதாவது பாதிப்பு என்னால் வந்து விடுமோ என்று. 😔😔😔.  இதில் இன்னொறு வேதனை என்னவென்றால் இந்த இக்கட்டான நிலையில் பணிக்கு அழைக்கும் நிர்வாகம் ஊழியர்களின் நலனில் சிறிதும் அக்கறையின்றி செயல்படுவது தான். அதற்கு ஒர் எடுத்துகாட்டு எங்கள் அலுவலகத்தில் நடந்த சம்பவம். ஒரு மனு எழுதினோம். அதில் தற்போதைய சூழ்நிலையில் ஊழியர்களுக்கு தேவையான கையுறை, முககவசம், சானிடைசரை பணிக்கு வரும் அனைவருக்கும் தினமும் வழங்க வேண்டும் என்பது தான். இதில் அனைத்து  தபால்காரர்களும் கையொப்பமிட்டு அஞ்சல் அதிகாரியிடம் கொடுக்க சென்றோம். ஆனால் அவரோ அதை கையில் கூட  வாங்கி பார்க்காமல் கோட்ட அலுவலகத்துக்கு மெயில் அனுப்பிருக்கேன் பதில் வரவில்லை என்கிறார். உங்களுக்கு வேறு ஏதாவது என்றால் உங்கள் அதிகாரியான (Authority) துனை கோட்ட அதிகாரியிடம் சென்று நான் சொன்னேன் என்று கூட சொல்லுங்கள் என்கிறார். மனுவை வாங்க கூட மனமில்லாத ஒர் அதிகாரி. அவர் அப்படி என்றால் கோட்ட அதிகாரி அவருக்கும் ஒரு படி மேல. அவரோ உங்கள் அலுவலகத்துக்கு எல்லாம் அனுப்பியிருக்கோம் என்கிறார். இந்த ஊரடங்கு போட்டு இது வரை இரண்டு முறை மட்டுமே கையுறையும், முககவசமும், வழங்கியிருக்கிறார்கள். ஆனால் நாங்கள் தினமும் அலுவலகத்துக்கு வருகிறோம். இதுபோன்ற அதிகாரிகளின் அலட்சிய போக்கினால் அனைத்து ஊழியர்களும், அவரை சார்ந்த குடும்பத்தாரின் நிலைமையும் கேள்வி குறிதான். ஏசியில் உலவும் அதிகாரிகளின் அலட்சியம், வெயிலிலும், மழையிலும், பணிபுரியும் ஊழியர்களின் உயிரில் விளையாடுவது வாடிக்கையான ஒன்றுதானே. இது வரை எந்தவொரு அதிகாரியும் பாதிக்கப்பட்டதாக கேள்வி பட்டதும் இல்லை, இனியும் படபோவதுமில்லை.  

                பாதிக்கப்பட்ட ஊழியனின் குரல்.😔😔😔

No comments: